பதிவு செய்த நாள்
05
நவ
2015
09:11
திருவனந்தபுரம், : இரைக்காக விலங்குகளையும், மனிதர்களையும் வேட்டையாடும் முதலைகளை கேள்விப்பட்டுள்ளோம். கேரள மாநிலத்தில், ஏரிக்கு நடுவில் அமைந்துள்ள கோவிலருகே வசிக்கும் முதலை ஒன்று, அங்கு வரும் பக்தர்கள் அளிக்கும் பிரசாதத்தை மட்டும் உண்டு உயிர் வாழ்கிறது. கேரளாவில், காங்., கட்சியின், முதல்வர், உம்மன்சாண்டி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு, காசர்கோட்டில், ௨ ஏக்கர் பரப்பளவுள்ள ஏரிக்கு நடுவில், அனந்த பத்மநாப சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஏரியில் வசிக்கும் ஒரு முதலையால், இந்த கோவில் பிரபலம். கோவிலில், பூஜை மணியோசை கேட்டவுடன், கோவிலுக்கு அருகில் இந்த முதலை வருகிறது. பூஜைக்கு பின், கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை உண்கிறது. இந்த முதலை, அசைவ உணவு எதையும் சாப்பிடுவதில்லை என்பது தான் ஆச்சர்யம்.