பதிவு செய்த நாள்
05
நவ
2015
10:11
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பூகோள சக்கரத்தில், ஓசோன் படலம் பற்றிய அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஓசோன் படலம் சேதமடைவது சர்வதேச பிரச்னை என்றது. இம்மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை, நீதிபதி சுதந்தர்குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடிந்து கொண்டது. பெஞ்ச் அளித்த உத்தரவுஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், முதல்முதலாக அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கான ஆதாரம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பூகோள சக்கரத்தில் உள்ளது, அந்த சக்கரத்தில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி தெரிந்து கொள்ள, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பார்க்கலாம் என பெஞ்ச் உத்தரவிட்டது. ககோளம் பூகோளம்மீனாட்சி அம்மன் கோயிலின் பழைய திருக்கல்யாண மண்டப மேடையின் தெற்கு மற்றும் வடக்கு சுவர்களில் மிகப்பெரிய வட்ட வடிவங்களில் ககோளம் பூகோளம் எனும் இரு ஓவியங்கள் வட்டவடிவில் இடம் பெற்றுள்ளன.இவற்றில் அண்டங்களின் தோற் றம், உயிரினங்களின் தோற் றம், கோள்களின் நிலை போன்றவை ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. 2008 ல் இது முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, கல்யாண மண்டபம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தொன்மை, பழமையை உணர்ந்த பசுமை தீர்ப்பாயம் ஓசோன் படலம் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பூகோள சக்கரத்தை பார்த்து தெரிந்து கொள்ளும்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.