தீபஒளி திருநாள், உலக மக்களுக்கு நல்லதை கொடுக்கக் கூடியது. இத்திருநாளை, இந்தியாவில் உள்ள அனைவருமே கொண்டாடுகின்றனர். அந்த கொண்டாட்டமானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். இந்த திருநாளானது, பகவான் கிருஷ்ணரால் ஏற்படுத்தப்பட்டது. நரகாசுரனை கொன்று, அவனுடைய பிரார்த்தனைபடி, எல்லாரும் புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி, இதை கொண்டாடுகிறோம். வட மாநிலங்களில் தீபாவளியன்று வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி, குபேர பூஜை செய்து கொண்டாடுவர். தீப ஒளி திருநாள் என்றால், தீபங்களுடைய வரிசை என்று பொருள். இந்நாளில் தீபம் ஏற்றி, பகவானை வழிபட்டால், அஞ்ஞானங்கள் விலகி, ஞானம் ஏற்படும் என்பது ஐதீகம்; பகவானுடைய அருளும் பூரணமாக கிடைக்கும். ஆகவே, எல்லாரும் ஒற்றுமையாக இருக்க, தீபஒளி திருநாளில் வாழ்த்துகிறோம்.