புரட்டாசி மாதம், பட்ச தசமி துவங்கி, ஐப்பசி மாதம், கிருஷ்ண பட்ச தீபாவளி அமாவாசை வரை, 21 நாட்கள் தினமும் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து, 21 இழையிலே கயிறு முறுக்கி; அதை, தினம் ஒரு முடியாக முடிந்து, கடைசி நாளன்று அக்கயிற்றை, கையில் அணிந்து விரதம் முடிக்க வேண்டும். 21 நாட்கள் முடியாதவர்கள், கிருஷ்ண பட்ச சதுர்த்தியன்றாவது, விரதம் ஏற்க வேண்டும். இவ்விரதமிருந்தே, பார்வதி, பரமனின் பாதி உடம்பை பெற்றதாக வரலாறு.