ரோப்கார் நிறுத்தம் வின்ச் பிசி பயணிகள் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2015 10:11
பழநி: பழநியில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், வின்ச்ஸ்டேஷனில் பக்தர்கள் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து மலைக்கு சென்றனர். பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு எளிதாக செல்ல ரோப்கார் வசதி செய்யப்பட்டது. அது அக்.,31 முதல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மூன்று வின்ச்கள் காலை 5 மணி முதல் பக்தர்களுக்காக இயக்கப் படுகிறது. கூட்டம் இல்லாதநேரம், இரவு 10 மணிக்குமேல் அன்னதானப்பொருட்கள், பூஜைப்பொருட்கள் ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படுகிறது. நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, வந்திருந்த பக்தர்கள் வின்ச் ஸ்டேஷனில் ஒன்றரை மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.