ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தீபாவளி பண்டிøயையொட்டி ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
மூலவர் அர்த்தநாரீஸ்வரருக்கு தேனபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பொதுமக்கள் திரளாக சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவரங்கத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலப்பழங்கூரில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.