பதிவு செய்த நாள்
14
நவ
2015
11:11
சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு, 15 லட்சம் ரூபாய் செலவில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சேலம் அம்மாபேட்டையில், செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும், ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை, 10 மணிக்கு லலிதா மகா யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பால், பழம், பஞ்சாமிர்தம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 15 லட்சம் ரூபாய் செலவில், 30 பவுனில் தங்க கவசம் தயாரிக்கப்பட்டு அம்மனுக்கு சாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.