சத்தியமங்கலம்: ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி, சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், 108 விளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது. சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.