பதிவு செய்த நாள்
14
நவ
2015
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக, ரூ.55 லட்சத்து, 75 ஆயிரத்து, 859 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், கோவிலில் உள்ள உண்டியல், கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் உள்ள உண்டியல் ஆகியவற்றில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று அண்ணாமலையார் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் நடந்தது. கோவில் ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உண்டியல் காணிக்கையாக, ரூ. 55 லட்சத்து, 75 ஆயிரத்து, 859ஐ பக்தர்கள் பணமாகவும், 190 கிராம் தங்கம், 350 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.