அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இன்று கம்பம் ஏறும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2015 10:11
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கந்த சஷ்டி விழாவில் இன்று கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, கடந்த 12ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. இரவு சுவாமி திருவீதியுலா நடந்து வருகிறது. இன்று(16ம்தேதி) 5ம் நாள் உற்சவத்தில் கோவில் எதிரில் நவ வீரர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (17ம்தேதி) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் வகையறாவினர் செய்துள்ளனர்.