பதிவு செய்த நாள்
17
நவ
2015
10:11
பாலக்காடு: பாலக்காட்டில், ரத சங்கமம் நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக நடந்தது. பாலக்காடு கல்பாத்தியில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், மந்தக்கரை, மகா கணபதி கோவில் தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை, 6:15 மணியளவில், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் இணைந்த ரத சங்கமம், உலா வந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.