துளசிமாலை, காவி வேட்டிகள் வாங்க ஐயப்ப பக்தர்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2015 10:11
கம்பம்:சபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்வதற்கு இன்று முதல் விரதம் துவங்கும் பக்தர்கள் துளசி மாலை, காவி வேட்டிகள் வாங்குவதில் நேற்று ஆர்வம் காட்டினர். இன்று கார்த்திகை மாதம் பிறப்பதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து, பக்தர்கள் 40 நாள் விரதத்தை துவக்குகின்றனர். இதையொட்டி,இன்று அதிகாலை முதல் சுருளி அருவி மற்றும் புண்ணிய நதிகளில் மாலை அணிவதற்காக நேற்றே துளசி மாலை மற்றும் காவி வேட்டி, சட்டை வாங்க கடைகளில் குவிந்தனர். கம்பம் வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, மெயின்ரோடு ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெரும்பாலான கடைகளில் துளசி மாலை பாசிகளை அதிக எண்ணிக்கையில் வெளியே தொங்க விட்டிருந்தனர். ஜவுளி கடைகளில் காவி வேட்டிகளை கடைக்கு வெளியில் பக்தர்கள் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மேலும், ஐயப்பன் பக்தி பாடல் கேசட்டுக்களை வாங்கவும் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் மாலை அணிய இருப்பதாக குருசாமிமார்கள் தெரிவித்துள்ளனர்.