Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வல்லவனுக்கு வல்லவன்! சபரிமலைக்கு வழிகாட்டும் விளக்கு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை இருந்தால் வள்ளலாகலாம் !
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2015
02:11

கருணையுள்ளவர்களாலேயே அன்பை வாரி வழங்க முடியும். எதனாலும் சாதிக்க முடியாததை, பொறுமையால் சாதிக்க முடியும். பொறுமையுள்ளவனே சிறந்த மனிதன். பிறர் பாராட்டும்போது பெருமிதமோ, திட்டும்போது வருத்தமோ கொள்ளாதீர்கள். மனதில் பக்தி தோன்றும்போதுதான், சமூகம் முழுமை பெறுகிறது. ஒவ்வொருவரும் பக்தி என்னும் மாபெரும் சக்தியின் ஒவ்வொரு அங்கமாகவே இருக்கின்றனர்.வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் நிசப்தம் மட்டுமே இருக்கும். இளமைப்பருவம் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகும். அவ்வேளையில் ஒருவனை சரியான வழிக்கு கொண்டு வருவதில் பெரும்பங்கு பெற்றோருக்கு உரியது.உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை தியானம் செய்வதற்கும், பிறருக்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்துங்கள். அந்நேரத்தில் பயனற்ற செயல்களைச் செய்யாதீர்கள். எதிர்பார்ப்பு, பேராசை இவை பெரும் துன்பத்தையே தரும். மனநிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இவ்விரண்டையும் விட்டுவிடுங்கள்.

நாம் செய்யும் நற்செயல், தீய செயல்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் பலனையும் அனுபவிப்போம்.சாப்பிடும் உணவு உடலின் அனைத்து பகுதிக்கும் சக்தி தருவதுபோல, தனி மனித அமைதியே முழு உலகத்திற்கும் பரவி சக்தி கொடுக்கிறது.கடவுள் அனைவரிடமும் இருக்கிறார். எனவே நீங்கள் பிறருக்குச் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையே ஆகும்.நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே செல்கிறீர்கள்? இந்த மூன்று கேள்விக்கும்  கடவுள் என்ற ஒரு வார்த்தை மட்டுமே பதிலாக இருக்கும்.பசிப்பிணியை போக்க வேண்டியது  ஒவ்வொருவரின் கடமையாகும். வெறுமனே தத்துவங்கள் மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் ஒரு நன்மையும் இல்லை.மனிதராகப் பிறந்தது, பக்தியின் மூலமாக இறைவனை அடைவதற்காகத்தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். அனைவருக்குள்ளும் அன்பு இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் மனிதரே நல்லறிவு கொண்டவர் ஆவார்.சேவை செய்வதன் மூலம், பிறர் மீது அன்பை வெளிப்படுத்துவதோடு, அதை பல இடங்களிலும் பரவவும் உதவுகிறோம்.கருத்தை வலியுறுத்தி சத்தமிடுவதால்  பயனில்லை. வாதத்தை சரியாக வைத்தால் மட்டுமே கருத்தை நிலைநிறுத்த முடியும்.அன்பை வெளிப்படுத்துவதற்கு மென்மையான பேச்சு போதும். மனிதாபிமானம் உள்ளவர்களிடம் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். அவர்களுக்கு மாறுபாடான வாழ்க்கை இருப்பதில்லை.அமைதியாக இருப்பவர்களுக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இரண்டும் இல்லை. அவர்கள் எப்போதும் ஒரு நிலையிலேயே இருக்கிறார்கள். (மகான் சத்ய சாய் பாபா)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar