ஒரு அய்யப்ப பக்தர் மாலைஅணிந்தது முதல், அவர் சபரிமலைக்கு சென்று திரும்பும் வரை வீட்டுவாசலில் தினமும் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது எரிய வேண்டும். இவ்வாறு விளக்கேற்றுவது, சபரிமலைக்கு சென்ற பக்தர்களுக்கு வழிகாட்டும் என்பது ஐதீகம். அந்த பக்தர் சபரிமலைக்கு சென்று திரும்பி வந்த பிறகு, விளக்கேற்றிய இடத்தில் தேங்காய் உடைத்து, சுவாமியே சரணம் ஐயப்பா என்று முழங்க வேண்டும். அதன் பிறகே அந்த பக்தர் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.