எல்லா கோயில்களிலும் பூஜையின்போது மணி அடிப்பது முக்கியமான ஒரு சடங்கு. மணி ஓசையிலிருந்து ஓம் என்ற நாதம் எழுவதாக நம்பிக்கை உண்டு. ஆனால் சென்னை வேளச்சேரி அருகிலுள்ள பள்ளிக்கரணை என்ற ஊரில் உள்ள பராசக்தி கோயிலில் பூஜை செய்யும்போது மணி அடிப்பதில்லை. இங்கு பெண்களே பூஜை செய்கிறார்கள். கருவறை வரை சென்று வழிபாடு செய்கின்றனர்.