திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டியில் ருத்ர காளியம்மன் கோயில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே 11 அடி உயர காளியம்மன், மிகப்பெரிய பீடத்தில் நின்ற நிலையில் பயங்கரத் தோற்றத்துடன் நிற்கிறாள். இந்த அம்பிகைக்கு பகலில் வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. அத்துடன், காளிக்கே உரித்தான நள்ளிரவு பூஜையும் இங்கு நடத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு தினமும் இங்கு பூஜை நடக்கும்.