இருமுடி சுமப்பது முதன் முதலில் ஐயப்பன் தானே சுமந்து சென்று வழிகாட்டியதன் அடிப்படையில் வந்த ஐதிக மரபு சபரி யாத்திரையின் தொடக்கமாக குருசாமி இருமுடியை ஏற்றி வைப்பது முதலில் அதனை சுமையாக நினைக்காமல் பக்தி பூர்வமாக சுமப்பது அவசியம். வெறும் கடனே என்று சுமப்பதும் நினைத்தபோதெல்லாம் இறக்கி வைப்பதும் கூடவே கூடாது. இருமுடி சுமப்பதையும் அதனை இறக்கிவைப்பதையும் அவரவர் குருசாமியின் வழிகாட்டல்படி கடைப்பிடிப்பது ரொம்பவே அவசியம்.