புதுச்சேரி: ரயில் நிலையம் எதிரில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.புதுச்சேரி சுப்பையா சாலை மோரேசன் வீதியில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், 63ம் ஆண்டு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.முருகர், வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை திருக்கல்யாணம் நடந்தது.அரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி இரண்டு அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி சிலை கரிக்கோலம் நடந்தது.14ம் தேதி முதல் 16ம் தேதி வரை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, 1௭ம் தேதி கந்தசஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.