கூடலூர்: கூடலூர் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் ஏழாவது நாளான நேற்று, சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. காலையில் கோயில் நிர்வாகத்தினரால் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுந்தரவேலவர், வள்ளி, தெய்வானைக்கு மெட்டி அணிவித்து, தாலி கட்டப்பட்டது. திருமணக்கோலத்தில் சுந்தரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.