திருநகர்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை விளாச்சேரியில் மெகா சைஸ் அகல் விளக்குகள் தயாராகின்றன. இரண்டடி உயரம், 2 அடி அகலத்தில் மெகா சைஸ் அகல் விளக்குகள் களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றன. 30 லிட்டர் எண்ணெய் கொள்ளளவு கொண்ட 7 விளக்குகள், 2 லிட்டர் அளவில் 15 விளக்குகள், 300 மில்லி கொள்ளளவு கொண்ட 2 ஆயிரம் விளக்குகள் தயாரிக்கின்றனர். இவ்விளக்குகள் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்.