Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதம்பைச் சித்தர் அழுகணி சித்தர் அழுகணி சித்தர்
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
கடுவெளிச் சித்தர்
எழுத்தின் அளவு:
கடுவெளிச் சித்தர்

பதிவு செய்த நாள்

23 நவ
2015
03:11

ஆனந்தக் களிப்பு

பல்லவி

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கேபாஞ்செய் தே யமன் கொண்டோடிப் போவான்

சரணங்கள்

1. சாபங் கொடுத்திட லாமோ? விதி
தன்னைநம் மாலே தடுத்திட லாமோ?
கோபந் தொடுத்திட லாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ?    பாபஞ்

2. சொல்லருஞ் சூதுபொய் மோசம்-செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம்-எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாய்-நேசம்    பாபஞ்

3. நீர்மேற் குமிழியிக் காயம் இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் -சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம்    பாபஞ்

4. நந்த வனத்திலோ ராண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந் தானொரு தோண்டி; மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி    பாபஞ்

5. தூடண மாகச்சொல் லாதே: தேடுஞ்
சொத்துக்களிலொரு தூசும்மில்லாதே;
ஏடணை மூன்றும் பொல்லாதே; சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே     பாபஞ்

6. நல்ல வழிதனை நாடு; எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு;
வல்லவர் கூட்டத்திற் கூடு; அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு     பாபஞ்

7. நல்லவர் தம்மைத்தள்ளாதே:- அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே;
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே: கெட்ட
பொய்ம் மொழிக்கோள்கள் பொருந்தவிள் ளாதே;     பாபஞ்

8. வேத விதிப்படி நில்லு: நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு:
சாத நிலைமையே சொல்லு; பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு     பாபஞ்

9. பிச்சையென் றொன்றுங்கே ளாதே: எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே:
இச்சைய துன்னையாளாதே-சிவன்
இச்சைகொண் டல்வழி யேறிமீ ளாதே    பாபஞ்

10. மெய்ஞ்ஞானப் பாதையிலேறு;- சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு:
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு:- உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு    பாபஞ்

11. மெய்க்குரு சொற்கடவாதே; நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக் காதே:
பொய்க்கலை யால்நட வாதே: நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே     பாபஞ்

12. கூடவருவ தொன்றில்லை:-புழுக்
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை;
தேடரு மோட்சம தெல்லை; அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை    பாபஞ்

13. ஐந்துபேர் சூழந்திடுங் காடு-இந்த
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு: அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு        பாபஞ்

14. உள்ளாக நால்வகைக் கோட்டை-பகை
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை:
கள்ளப் புல்லெனன்னுங் காட்டை வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை    பாபஞ்

15. காசிக்கோ டில்வினை போமோ?-அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண்டாமோ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ? பல
மேவப் புரிந்திடில் என்னனு கூலம்?    பாபஞ்

16. பொய்யாகப் பாராட்டுங் கோலம் எல்லாம்
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்:
மெய்யாக வேசுத்த சாலம்-பாரில்
பேதம்பிறப்பது போற்றினும் போலாமோ?     பாபஞ்

17. சந்தேகமில்லாத தங்கம்-அதைச்
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்:
அந்த மில்லாதவோர் துங்கம்-எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம்        பாபஞ்

18. பாரிலுயர்ந்தது பத்தி:- அதைப்
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி:
சீரி லுயரட்ட சித்தியார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி    பாபஞ்

19. அன்பெனும் நன்மலர் தூவிப்-பர
மானந்தத் தேவின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுடலாவி -நாளும்
ஈடேற்றத் தேடாய் நீ இங்கே குலாவி    பாபஞ்

20. ஆற்றறும் வீடேற்றங் கண்டு-அதற்
கான வழியை யறிந்து நீ கொண்டு
சீற்றமில்லாமலே தொண்டு -ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடுங் கெண்டு     பாபஞ்

21. ஆன்மாவாலாடிடு மாட்டந்-தேகத்
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம்-நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம்    பாபஞ்

22. எட்டு மிரண்டையும் ஓர்ந்து -மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து -ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து    பாபஞ்

23. இந்த வுலகமு முள்ளு சற்றும்
இச்சைவையாமலே யென் நாளுந் தள்ளு;
செந்தேன் வெள்ளம் மதை மொள்ளு; உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு    பாபஞ்

24. போய்வேதந் தன்னைப் பாராதே:-அந்தப்
போதகர் சொற்புத்தி போதவாராதே:
மைவிழியாரைச் சாராதே:- துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே    பாபஞ்

25. வைதோரைக் கூடவையாதே: இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே:
வெய்ய வினைகள் செய்யாதே; கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே     பாபஞ்

26. சிவமன்றி வேறே வேண்டாதே:- யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே!
தவநிலை விட்டுத் தாண்டாதே: நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே     பாபஞ்

27. பாம்பினைப் பற்றியாட்டாதே:- உன்றன்
பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே
வேம்பினை யுலகிலூட்டாதே: உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்க நாட்டாதே    பாபஞ்

28. போற்றுஞ் சடங்கை நண்ணாதே:- உன்னைப்
புகழ்ந்து பலரிற் புகலவொண்ணாதே:
சாற்றுமுன் வாழ்வையெண்ணாதே பிறர்
தாழும் படிக்கு நீ தாழ்வைப் பண்ணாதே    பாபஞ்

29. கஞ்சாப் புகைபிடி யாதே-வெறி
காட்டி மயங்கியே கட்குடியாதே;
அஞ்ச வுயிர் மடியாதே: பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படியாதே    பாபஞ்

30. பத்தி யெனுமேனி நாட்டித்-தொந்த
பந்தமற்றவிடம் பார்த்ததை நீட்டிச்
சத்தியமென்றதை யீட்டி-நாளுந்
தன்வச மாக்கிக் கொள் சமயங்களோட்டி    பாபஞ்

31. செப்பரும் பலவித மோகம்-எல்லாஞ்
சீயென்றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஓப்பரும் அட்டாங்க யோகம் நன்றாய்
ஓர்ந்தறி வாயவற்றுண்மைசம் போகம்    பாபஞ்

32. எவ்வகையாக நன்னீதி அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீ போதி:
ஒவ்வாவென்ற பல சாதியாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற் வோதி    பாபஞ்

33. கள்ள வேடம் புனையாதே: பல
கங்கையிலேயுன் கடம் நனையாதே;
கொள்ளை கொள்ள நினையாதே; நட்புக்
கொண்டு புரிந்து நீ கோள் முனையாதே:    பாபஞ்

34. எங்குஞ் சயபிர காசன்-அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவான் ஈசன்        பாபஞ்

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar