3. முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா! கோலமிட்டுப் பாரேனோ!
4. சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து முத்துப் போலன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந் தித்திக்குந் தேனமிர்தம் என் கண்ணம்மா! தின்றுகளைப் பாரேனோ!
5. பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச் செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா! கண்குளிரப் பாரேனோ!
20. கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்தவுண்டு உண்ணாக்கு மேலேறி உன் புதுமை கண்டவர்க்குக் கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா காரணங்கள் மெத்தவுண்டே!
21. சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கந் தான் சேர்த்து மாயப் பொடிகலந்து வாலுழுவை நெய்யூற்றிப் பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே இட்ட மருந்தாலே என் கண்ணம்மா! இவ்வேட மானேண்டி!
22. பாதாள மூலியடி பாடாணந் தான் சேர்த்து வேதாளங் கூட்டியல்லோ வெண்சாரை நெய்யூற்றிச் செந்தூர மையடியோ செகமெலாந் தான்மிரட்டித் தந்த மருந்தாலே என் கண்ணம்மா! தணலாக வேகுறண்டி!
23. கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல் பிள்ளை யழுதுநின்றால் பெற்றவட்குப் பாரமடி பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல் கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா கடுகளவு காணாதோ!
24. பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள் விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம் பட்டணமுந் தான்பறி போய் என் கண்ணம்மா! படைமன்னர் மாண்டதென்ன?
28. உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்? தன்னை மறந்தார்க்குத் தாய் தந்தை யில்லையடி! தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால் உன்னை மறக்காமல் என் கண்ணம்மா! ஒத்திருந்து வாழேனோ!
29. காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்கு முன்னே மாயச் சுருளோலை என் கண்ணம்மா! மடிமேல் விழுந்ததென்ன?