பரிமலை: பம்பையில் புதிய சுத்திகரிப்பு நிலையம், சன்னிதானத்தில் புதிய காம்பளக்ஸ் உள்ளிட்ட திட்டங்களுக்கு சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டி அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டி கூட்டம் அதன் தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் திருவனந்தபுரத்தில்நடந்தது.வரும் ஆண்டில் மாஸ்டர் பிளான் படி சபரிமலையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. பம்பையில் சுத்திகரிப்பு நிலையம், விருந்தினர் மாளிகை, பம்பை ஆற்றின் கரையில் படிக்கட்டுகள், சபரிமலை பாண்டிதாவளத்தில் தங்கும் வசதிக்காக தர்ஷன் காம்ப்ளக்ஸ், தந்திரி மற்றும் மேல்சாந்திகள் தங்குவதற்கு புதிய கட்டிடம் ஆகியவை வரும் ஆண்டில் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.