திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2015 11:11
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் பத்மாஸனித்தாயார் சன்னதியில் சிறப்பு லட்சார்ச்சனை விழா நடந்தது. மூலவரான அம்பாளுக்கு விசேஷ திருமஞ்சனம், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம், மகாலட்சுமி சகஸ்ரநாம பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பத்மாஸனித்தாயார் கைங்கர்ய சபா, ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.