பதிவு செய்த நாள்
26
நவ
2015
12:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், முக்கிய பண்டிகை நாட்களில், சுவாமி சன்னிதி அர்த்த மண்டபத்தில், சிறப்பு தரிசனம் செய்ய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பிரதோஷம், கார்த்திகை சோமவாரங்கள், ருத்ராபிஷேகம், மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, அன்னாபிஷேகம் போன்ற நாட்களில், மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சன்னிதி அர்த்த மண்டபத்தில், 50 நபர்கள் மட்டும், அபிஷேக தரிசனம் செய்ய, நபருக்கு தலா, 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்சேபனை, கருத்து தெரிவிப்போர், டிச., 20ம் தேதிக்குள், எழுத்துப்பூர்வமாக, கோவில் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என, இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.