பதிவு செய்த நாள்
27
நவ
2015
12:11
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பின், 6:45 மணியளவில், மலை கோவிலில், தீபம் ஏற்றப்பட்டது. வேலாயுதசாமிக்கு பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலும்பிச்சை, இளநீர், அரிசி மாவு ஆகியவற்றால், சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. கோவில் முன் வைக்கப்பட்ட சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. கிணத்துக்கடவு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிவலோகநாதர் கோவிலிலும், தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.