பாலமேடு: பாலமேடு பாறைக்கல் தெரு கருப்புசாமி கோயில், வடக்கு தெரு செல்லாயி அம்மன் கோயில், நாயுடு தெரு முத்தாலம்மன் கோயில், நாடார் தெரு மாரியம்மன் கோயில்களில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. மஞ்மசலை ஆற்றில் அனைத்து சமுதாயத்தினர் பனை மரம் நட்டு, சொக்கப்பனை கொளுத்தினர்.* சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி, திருமூலநாதர்சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை உற்சவம் நடந்தது. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. சர்வ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளினார். கோயில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத் மற்றும் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.