டி.என்.பாளையம்: கோபி தாலுகா, டி.என்.பாளையம் யூனியன், புஞ்சைத்துறையம் பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற, மாகாளியம்மன் வகையறா கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, நாளை (29ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக குண்டங்களுடன் யாக சாலை அமைக்கப்பட்டு கணபதி வேள்வியுடன் விழா நேற்று துவங்கியது. அதைத் தொடர்ந்து ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. டி.என்.பாளையம் குமரன்கோவில் அர்ச்சகர் மந்திரிகிரி சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர்கவுண்டர் ராஜம்மாள் ரங்கசாமி தலைமையில் விழாக்குழு செய்து வருகிறது.