பதிவு செய்த நாள்
28
நவ
2015
11:11
வேலூர்: பாலாற்றில் வெள்ளம் வந்ததால், வஞ்சியம்மனுக்கு, 1,008 பால் குட அபிஷேகம் நடந்தது. கடந்த, 13 ஆண்டுகளுக்கு பிறகு வேலூர் மாவட்டம் பாலாற்றில் வெள்ளம் வந்துள்ளது. இதனால், பாலாற்றங்கரையோரம் உள்ள வஞ்சூர் கிராம பெண்கள் அங்குள்ள வஞ்சியம்மனுக்கு, 1,008 பால் குட அபிஷேகம் செய்தனர். இதற்காக, வஞ்சூர் பஞ்சாயத்து தலைவர் புருசோத்தமன் தலைமையில், 1,008 பெண்கள் வஞ்சூர் பாலாற்றில் இருந்து ஊர்வலமாக, வஞ்சூர் வஞ்சியம்மன் கோவிலுக்கு வந்து, தங்கள் கையாலே பாலாபிஷேகம் செய்தனர்.