Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ... திருவொற்றியூர்  தேர் வெள்ளோட்டம், கும்பாபிஷேகம் கோலாகலம்! திருவொற்றியூர் தேர் வெள்ளோட்டம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 சோடமகாலிங்க மற்றும் நாகேஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2015
11:11

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், உலக பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தை சுற்றிலும் 16 மண்டபங்களில் அமைந்துள்ள சோடசமகாலிங்க சுவாமிகளுக்கு இன்று  மகாகும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

இதில் பல்லாயிரக் கணக்காண பக்தர்கள் நான்கு கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஓர் முறை நடைபெறும் மகாமக பெருவிழா வருகிற பிப்ரவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது இதனை யொட்டி கும்பகோணம் நகரில் உள்ள முக்கிய சைவ மற்றும் வைணவத்தலங்களில் கும்பாபிஷேகங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இப்புனித குளத்தின் உள்ளே கங்கா, பிர்மா, யமுனை,  கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, உள்ளிட்ட 20 வகையான தீர்த்த கிணறுகள் உள்ளன மேலும் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. அதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்ததேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், உள்ளிட்ட மொத்தம் 16 சிவலிங்க திருமேனிகள் அமைந்துள்ளன இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என குறிப்பிடுவது வழக்கம்.

இத்தகைய சோடஷமகாலிங்க சுவாமிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 19 லட்சத்தி 38 ஆயிரம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்காண யாகசாலை பூஜைகள் கடந்த 27ம் தேதி சர்வசாதகம் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் தொடங்கி இன்று 4ம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு நடைபெற்று வரிசையாக தென்மேற்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் இருந்து திருவலமாக சென்று 16 மண்டபத்திற்கும் அடுத்தடுத்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்காண மக்கள் நான்கரைகளிலும் திரண்டு நின்று தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதைபோல, கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயிலில் பிரகன்நாயகி உடனாய நாகேசுவவரர் மூலவராக எழுந்தருளியுள்ளார். மகாமக பெருவிழாவை முன்னிட்டு இக்கோயில் 1கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான திருப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. 26ம் தேதி காலை சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், சம்ஹிதாஹோமம் நடைபெற்றது. இதையடுத்து காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் யானை மீது கொண்டு வரப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

இதையெடுத்து, இன்று காலை வரை 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று. புனித கடங்கள் புறப்பட்டு சக விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு சென்றடைந்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேதபாராயணம், தேவாரங்கள் சிறப்பு மங்கள இசைகளும், நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar