பதிவு செய்த நாள்
30
நவ
2015
12:11
வேலூர்: தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 25ம் தேதி முதல், கோ பூஜை, முனீஸ்வர பூஜை, நவ கன்னி பூஜை, மகா கணபதி ஓமம், வாஸ்து சாந்தி, அஷ்ட லஷ்மி, குபேர லஷ்மி ஓமம், அஷ்ட பந்தனம் சாத்துதல், நாடி சந்தானம் பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 7.32 மணிக்கு மேல், 9.44 மணிக்குள், 200க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, ஆந்திர மாநிலம், என்.ஆர். பேட்டை பாலாஜி பட்டர் குழுவினர்களால், ஆரோக்கிய லட்சுமி தன் வந்திரி பெருமாளுக்கும், இதர பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தினர். தன்வந்திரி பெருமாளுக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.