புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு செல்வ விநாயகர் கோவில் சகஸ்ர நாம அர்ச்சனை, மகா அபிஷேகம் நடந்தது.
செல்வ விநாயகர், கைலாசநாதர், திரிபுரசுந்தரி, வெங்கடாஜல பதி, வள்ளி தேவசேனா சுப்ரமணியர் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. விநாயகர், அம்பாள், விஷ்ணு, சிவபெருமான், முருகப்பெருமானுக்கு, காலை 8:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி கந்தர் சஷ்டி கவச பாராயணகுழு மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி செய்திருந்தனர்.