சபரிமலை காட்டில் வாகனம் பழுதா? டயல் பண்ணுங்க 04735 205309
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2015 12:12
சபரிமலை: சபரிமலை வரும் பாதையில் காட்டில் வானம் பழுதாகி விட்டதா? இலவசமாக பழுது நீக்க தர ஐயப்பா சேவா சங்கம் மொபைல் ஒர்க் ஷாப் தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் பத்தணந்திட்டை மற்றும் எருமேலி பாதை வழியாக வருகின்றனர். குறிப்பிட்ட அளவு தூரத்தை கடந்து விட்டால் அடர்ந்த காடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் போது வாகனம் பழுதாகி விட்டால் பக்தர்கள் பாடு மிகவும் சிரமம் ஆகி விடும். அதை சரி செய்ய பக்கத்தில் உள்ள ஊரில் இருந்து ஒர்க் ஷாப் ஊழியர்கள் அழைத்து வந்து சரி செய்ய பல மணி நேரம் ஆகி விடும். இதை தவிர்ப்பதற்காக ஐயப்பா சேவாசங்கம் இலவச மொபைல் ஒர்க்ஷாப்பை தொடங்கியுள்ளது. பத்தணந்திட்டை ரோட்டில் ளாகா-பம்பைக்கு இடையிலும், எருமேலி ரோட்டில் கண்ணமலை-இலவுங்கல் இடையிலும் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் 04735 205309 என்ற எண்ணுக்கு டயல் செய்தால் போதுமானது. ஒர்க்ஷாப் வாகனம், மெக்கானிக்குடன் குறிப்பிட்ட இடத்துக்கு வரும். வாகனத்தில் உதிரி பாகங்களும் இருக்கும். சர்வீஸ் இலசம். உதிரி பாகங்களுக்கு பக்தர்கள் பணம் செலுத்த வேண்டும். மொலை ஒர்க்ஷாப்பின் அலுவலகம் நிலக்கல்லில் செயல்படுகிறது.