சரஸ்வதி தேவியின் பூஜைக்கு உகந்த பூக்கள்: செம்பருத்தி, வேறு சிவப்பு நிற பூக்கள், தாமரை (சிவப்பு, வெள்ளை) நந்தியாவட்டை, சம்பங்கி, ரோஜா ஆகியவை பாரிஜாத புஷ்பம் மட்டும் சமர்ப்பிக்கக் கூடாது. புன்னை, பாதிரி, கண்டங்கத்திரி சமர்ப்பிக்கலாம். பேலூரில் அமைந்திருக்கும் நடன சரஸ்வதி சிற்பம் மிகவும் அபூர்வமான படைப்பாகும். வீணையை மீட்டிக் கொண்டே நர்த்தனமாடும் அழகான வடிவமைப்பை அதில் காண முடிகிறது.