உலக நன்மைக்காக அய்யப்பனுக்கு 12 மணி நேர சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2015 11:12
புதுச்சேரி: ஸ்ரீதர்ம சாஸ்தா சிநேகித சேவா சமிதி சார்பில் உலக நன்மையை முன்னிட்டு அய்யப்பன் சுவாமிக்கு 12 மணி நேர பூஜை மற்றும் ஹோமங்கள் நாளை ௫ம் தேதி நடக்கிறது. ஸ்ரீதர்ம சாஸ்தாவின் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத் திரத்தை முன்னிட்டு நாளை 5ம் தேதி முத்தியால் பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் அய்யப்ப சுவாமிக்கு ௧2 மணி நேர பூஜை, ஹோமங்கள், அபிஷேகங்கள் நடக்கிறது. நாளை 5ம் தேதி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மகா சங்கல்பம் துவங்கி, 108 கலசங்களில் பூஜைகள் செய்து அபிஷேகம் மகா தீபாரதனை நடக்கிறது. இந்த பூஜைகள் மாலை 6 மணி வரை நடக்கிறது. அய்யப்ப பக்தர்களால் பஜனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அய்யப்பனுக்கு மகா தீபாராதனை மொரட்டாண்டி நவக்கிரக ஆலய நிறுவனர் கீதாராம சிவாச் சாரியார் தலைமையில் நடக்கிறது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ தர்ம சாஸ்தா சிநேகித சேவா சமிதி பக்தர்கள் செய்து வருகின்றனர்.