பதிவு செய்த நாள்
05
டிச
2015
11:12
திருப்பூர்: மழையால் சீரழிந்துள்ள சென்னை நகர மக்களுக்கு, ஆடை, உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை சேகரித்து, திருப்பூர் தொழில் துறையினர் அனுப்பி வருகின்றனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலை திரும்ப வேண்டி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை சார்பி ல், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், நேற்று கூட்டு பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அவ்வகையில், பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதிகளில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில், நேற்று மதியம், நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பிரார்த்தனை கூட்டம் நடத்தினர். செரீப் காலனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடந்த பிரார்த்தனையில், இந்திய தொழில் கூட்டமைப்பு மாநில கவுன்சில் பிரதிநிதி ராஜா சண்முகம், ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.