மழை பாதிப்பு நீங்க மாளிகைப்புறத்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2015 10:12
சபரிமலை: தமிழகத்தில் மழை பாதிப்பு நீங்கி, இயல்பு நிலை திரும்ப வேண்டி, சபரிமலை மாளிகைப்புறத்தம்மன் கோவிலில், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சிறப்பு பகவதி சேவா பூஜை நடத்தினார். சபரிமலையில் நேற்று அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சன்னிதானத்தில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தொடர் மழை: சபரிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். நடப்பு மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் தினமும் ஏதாவது ஒரு நேரத்தில் சபரிமலையில் மழை பெய்கிறது. தினமும் மதியத்துக்கு பின்னர்தான் மழை பெய்கிறது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மழை பெய்கிறது. மதியத்துக்கு பின்னர் பெய்யும் மழையால் பக்தர்கள் தங்க இடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மழையால் இரவில் குளிரும் கடுமையாக உள்ளது.