சபரிமலை: அப்பம், அரவணை மற்றும் நெய்யபிஷேக டிக்கெட்டுகள் தனலெட்சுமி வங்கி கிளைகளில் கிடைக்கிறது.சபரிமலை பயணத்தில் பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய்யபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் கொண்டு வரும் நெய் அபிஷேகம் செய்ய பத்து ரூபாய் கட்டணம். இதற்கான டிக்கெட்டுகள் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு டிக்கெட் கவுண்டர்களில் வழங்கப்பட்டு வருவதுடன் அனைத்து தனலெட்சுமி வங்கிக் கிளைகளிலும் கிடைக்கிறது. இதுபோல அவரணை, அப்பம் டிக்கெட்டுகளும் இந்த வங்கிகிளைகளில் கிடைக்கிறது. ஒரு டின் அரவணை 60 ரூபாய். ஒரு பாக்கெட் அப்பம் 25 ரூபாய். பக்தர்கள் தங்கள் ஊர் வங்கி கிளைகளில் இருந்து டிக்கெட் வாங்கி வந்து விட்டால், சன்னிதானத்தில் உள்ள சிறப்பு கவுண்டரில் சிரமம் இல்லாமல் பிரசாதம் பெற்று செல்ல முடியும்.