பதிவு செய்த நாள்
08
டிச
2015
11:12
வில்லியனுார்: திருக்காஞ்சி கெங்கைவராக நதிஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் லிங்க பிரதிஷ்டை நடந்தது. வில்லி யனுார் அடுத்த திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதிஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் ரூ. 2 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி, 2011ம் ஆண்டு நவ., மாதம் துவங்கியது. புதியதாக வடக்கு ராஜகோபுரம், உள் பரிவாரங் களில் விநாயகர், முருகர், காமாட்சி, மீனாட்சி, நடராஜர் மற்றும் அகத்தியருக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கெங்கை வராக நதிஸ்வரருக்கு புதியதாக கற்பகிரகம் முழுவதும் கருங்கலால் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 சதவீதம் நடந்துள்ள நிலையில் வரும் ஜன., 20ம் தேதி கோவில் கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 5:00 மணிக்கு கும்பாபிஷேக பந்தகால் நடப்பட்டது. 7:00 மணிக்கு மூலவருக்கு பால ஸ்தாபனம், பகல் 12:00 மணிக்கு மேல் கோவிலில் இருந்த பழமைவாய்ந்த மூலவர் லிங்கத்தை, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலைய த்துறை ஆணையர் தில்லைவேல், கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் செல்வம், நடராஜன், மோகன், சுப்ராயன், கோவிந்தன், சவரணன், ÷ காவில் நிர்வாக அதிகாரி சீத்தாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.