பதிவு செய்த நாள்
10
டிச
2015
11:12
செஞ்சி: இஞ்சிமேடு, லட்சுமி நரசிம்மருக்கு, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லுார் அடுத்த இஞ்சிமேட்டில், பெருந்தேவி நாயகி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 7:00 மணிக்கு, கோபூஜையும், வரதராஜர், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசி ம்மர், ராமர், சீதா, லட்சுமணர், கருடாழ்வார், கல்யாண வரத அனுமன் ஆகியோருக்கு திருமஞ்சனமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, வரதராஜர், பூதேவி, பெருந்தேவி தாயாருடன் யாகசாலையில் எழுந்தருளினார். இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில், கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதில், நரசிம்ம, கருட, மகாலட்சுமி, தன்வந்திரி பூஜையும், ஒரு லட்சம் மந்திரங்களும் ஓதப்பட்டது. பின், ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு, கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீரங்க சட÷ காப கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.