திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மழை வெள்ளம் புகுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2015 11:12
திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மழை நீர் குளம் போல் தேங்கியிருப்பதால், பக்தர்கள் அவதியடைகின்றனர். திண்டிவனம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ராஜாங்குளம் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த மழை நீர், குளத்தையொட்டியுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், புகுந்து விட்டது. இதற்கு காரணம், லட்சுமிநரசிம்மர் கோவிலில் இருந்து வெளியேற்றப் படும் நீர் அனைத்தும், வாய்க்கால் வழியாக, ராஜாங்குளத்திற்கு திருப்பி விடப்படுகின்றது. தற்போது ராஜாங்குளத்தில் அளவிற்கு அதிகமாக மழை நீர் நிரம்பியதால், வழக்கத்தை விட நான்கு அடி நீர் உயர்ந்துவிட்டது. இதனால் உபரி நீர் அனைத்தும், கோவிலுக்குள் புகுந்துவிட்டது. இவ்வாறு புகுந்த நீர் கோவிலின் மூலஸ்தானம் மற்றும் சுற்றுப்பிரகாரத்தில் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இதனால் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக, பக்தர்கள் கோவிலை சுற்றி வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.