பதிவு செய்த நாள்
10
டிச
2015
12:12
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை கோதண்டராம ஆஞ்சநேய கோவில் பக்த ஜனசபையின் 14ம் ஆண்டு, பாத யாத்திரை புறப்பாடு, இன்று நடைபெறுகிறது. கோதண்டராம சுவாமி கோவிலில் இருந்து, இன்று (டிச. 10) பாத யாத்திரை புறப்பட்டு, புதுவாயல், பெரியபாளையம் வழியாக, வடமதுரை, வெங்கல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர், ஈக்காடு வழியாக திருவள்ளுர் செல்லும். வெள்ளிக்கிழமை அதிகாலை, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் வழியாக, திருக்காக்களுர் வீர ஆஞ்சநேயர் கோவில் சென்று அடைகிறது. பின்னர் சுவாமிக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.