சபரிமலை: சபரிமலை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி பக்தர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:பெருவழிப்பாதையிலும், பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் பாதையிலும் பக்தர்கள் வரும் போது ஆங்காங்கே ஓய்வு எடுக்க வேண்டும். இதயநோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் விரதம் என்ற பெயரில் நிறுத்த கூடாது. இதில் டாக்டர்களின் ஆலோசனை கண்டிப்பாக பெற வேண்டும். இதய நோய் உள்ளவர்கள் எந்த காரணத்தாலும் வேகமாக மலை ஏறக்கூடாது. அவ்வப்போது ஓய்வு எடுக்க வேண்டும். மலை ஏறும் போது மூச்சுத்திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டால், உடனடியாக நடப்பதை நிறுத்தி விட்டு பக்கத்தில் உள்ள அவசர சிகிச்சை மையம் மூலம் மருத்துவ உதவி பெற வேண்டும். பக்தர்கள் சபரிமலை வரும் போது சுத்தம், சுகாதரத்தை பேணி காக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.