கணபதியே அடியாகி அகில மாகிக் காரணத்தின் குருவாகிக் காட்சி யாகிக் குணபதியே கொங்கைமின்னாள் வெள்ளை ஞானக் குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக் கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப் பணியரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியந்தா னெண்ணிப் பாரே.
12. பெற்றோரே யென்றுரைத்தீர் வசிட்டரே! நீர் பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்: சத்தான சத்துகளு மடங்கும் காலம் சக்கரமுந் திரும்பி விட்டாற் சமயம் வேறாம் சித்தான பஞ்சவர்க ளொடுங்கும் போது சேரவே ரிடிமுனிவர் சித்த ரோடு முத்தாகப் பஞ்செழுத்தி லொடுக்க மாவார் முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட் டீரே.
15. வந்தேனே யென்றுரைத்த வாறு கொண்டு வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி இருந்தேனே முனிநாதா! சரணங் காப்பீர் என்று சிவன் சபைநாடி முனிவர் வந்தார்: மைந்தனையே யின்றருளுங் கடவுள் நாதா! மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்: சித்தனைசெய் ஈச்சுரனே வந்தேனையா சிவசிவா இன்னதென்று செப்பி டீரே?
16. செப்புமென்ற புசுண்ட முனி முகத்தை நோக்கிச் சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்பு வார்கேள் கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம் குரு நமசி வாயமெங்கே பரந்தா னெங்கே? அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவ ரெங்கே? அயன்மாலும் சிவன் மூவ ரடக்க மெங்கே? ஒப்புமிந்த யுகமாறிப் பிறந்த தெங்கே? ஓகோகோ முனிநாதா வுரைசெய் வீரே!
26. லீலைபோற் காணுமுகம் போலே காணும் நிலைபார்த்தால் புருடரைப்போற் றிருப்பிக் காணும்: ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்க ளாறுங் காணும் வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணுஞ் சோலையா யண்டமதிற் சிவந்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமுங் காணே.
27. பரத்திலே மணிபி பிறக்கும் மணி யினுள்ளே பரம்நிற்குஞ் சுடர்வீசும் இப்பாற் கேளும்: நிரத்திலே சடம்தனில் வகாரங் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும் வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும் வரும்போலே சிகாரத்தில் மகரங் காணும் நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும் நன்றாமப் பூமியப்போ பிறந்த தன்றே.
28. பிறந்ததையா இவ்வளவு மெங்கே யென்றால் பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம் கறந்ததையா யிவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை: கறந்ததையா உலகமெல்லாங் காமப் பாலைக் காலடியிற் காக்கவைத்துச் சகல செந்தும் இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது எங்கென்றா லுன்னிடத்தி லிருந்தாள் கன்னி.
29. இடப்பாக மிருந்தவளு மிவளே மூலம் இருவருக்கும் நடுவான திவளே மூலம் தொடக்காக நின்றவளு மிவளே மூலம் சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம் அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம் ஐவருக்குங் குருமூல மாதி மூலம் கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே.