விழுப்புரம்: விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில், 1008 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு சிவவேள்வியுடன் 1008 சங்கு பூஜைகள் துவங்கி, காலை 9:30 மணிக்கு வேள்வி பூஜை நிறைவடைந்தது. பின், காலை 10:00 மணிமுதல் பகல் 12:00 மணி வரை சங்காபிஷேகம், வேள்வியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கைகளால் சங்கை எடுத்து சென்று கருவறையில் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, காலை 12:00 மணிக்குமேல் கலசம் புறப்பட்டு மகாபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது.