பதிவு செய்த நாள்
03
ஆக
2011
12:08
மன்னார்குடி: மன்னை ராஜாகோபால ஸ்வாமி கோவில் விஸ்வரூப தரிசன கைங்கர்ய சபா குழுவெளியிட்ட அறிக்கை:திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலஸ்வாமி - செங்கமலத்தாயார் கோவில் உள்ளது. இந்த கோவி ல் பல நூற்றாண்டாக அருளுக்கும், பொருளுக்கும் அதிபதியாகவும், கருணைக்கடலாக காக்கும் தெய்வமாக, கல்யாண குணங்கள் அனைத்தும் உடையவராகவுள்ள எம்பெருமான், அன்பர்களை காத்தருளும் பொ ருட்டும் ஸ்ரீராஜகோபாலன் என்னும் திருநாமத்துடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.தட்சிணத்துவாரகை செம்பகாரண்ய ஷேத்ரம் என்று சொல்லப்படும ராஜகோபால ஸ்வாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. சைவ புலவர்களால் பாடல் பெறற திருத்தலமான இக்கோவில் சுமார் 24 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.இத்திருக்கோவிலில் மூன்று மதில்கள், 16 கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், பள்ளியறை ஆகியன உள்ளது. இக்கோவிலின் தெப்பக்குளம் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவாரூர் தேர் அழகு, மன்னார்குடி மதில் அழகு என்று இக்கோவிலை வர்ணிப்பர். ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 18 நாட்கள் திருவிழா நடக்கிறது.இத்திருத்தலத்தில் மீண்டும் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்று வருகிறது. யானை, காராம்பசு, குதிரை, மேளதாள முழக்கங்களுடன் விஸ்வரூப தரிசனம் விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று அருள் பெற வேண்டும்.
ஆடிப்பூர தேரோட்டம் செங்கமலத்தாயார் பவனி
மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீசெங்கமலத்தாயார் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.தென் திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீராஜகோபாலஸ்வாமி திருக்கோவிலில் பெருமாளுக்கு பங்குனியில் தேரோட்டம் நடப்பது போல், படிதாண்டா பத்தினி என அழைக்கப்படும் ஸ்ரீ செங்கமலதாயாருக்கு திருகோவில் உள் பிராகத்தில் ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடப்பது வழக்கம்.இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை ஆறு மணிக்கு தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் அமர்ந்து தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் இரண்டரை மணியளவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், வடம் பிடித்தால் வாழ்க்கையில் வளம் பெறலாம் என்ற நம்பிக்கையில் பக்தர்களும் திரளாக சென்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.