பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று மார்கழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2015 11:12
பேரூர்: பேரூர் பட்டீவரர் கோவிலில், மார்கழி மாத திருவிழா இன்று துவங்குகிறது. கோவையில் பழமையான கோவில்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று. கோவிலில் மார்கழி மாத திருவிழா இன்று துவங்குகிறது. காலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு நடராஜர், சிவகாமி மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டு, காப்பு கட்டப்படுகிறது. கோவில் சிவாச்சாரியார்களால், காலையும் மாலையும் திருவெம்பாவை பாடல் பாடப்படும். விழாவை முன்னிட்டு, நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் காலையும் மாலையும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.