பதிவு செய்த நாள்
17
டிச
2015
11:12
ராசிபுரம்:
ராசிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு,
லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ராசிபுரம் மேட்டுத் தெருவில்,
தேவி பூதேவி சமேத பொன் வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. வரும், 21ம் தேதி
அதிகாலை, 5 மணிக்கு ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு விழா
நடக்கிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான
பக்தர்கள், ஸ்வாமியை வழிபட்டு செல்வது வழக்கம். இவர்களுக்கு, ஜனகல்யாண்
இயக்கத்தினர், ஆண்டுதோறும் லட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகின்றனர். இந்த
ஆண்டும், 50 ஆயிரம் லட்டுகளை வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். விழாவிற்கு,
நாட்கள் குறைவாக உள்ளதால், லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து
வருகிறது.