மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மனுக்கு நேற்று, 4.20 லட்சம் ரூபாய் மதிப்பு வைரமூக்குத்தி அணிவிக்கபட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஓமலூரை சேர்ந்த அட்சயா நண்பர்கள் குழுவினர் மேச்சேரி பத்ரகாளியம்மனுக்கு, 4.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரமூக்குத்தியை காணிக்கையாக வழங்கினர். நேற்று காலை வைரமூக்குத்தி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கப்பட்டது.