பதிவு செய்த நாள்
17
டிச
2015
11:12
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பள்ளிக்கரணை, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில், ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை சுற்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு, நேற்று காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.அதில், பொது மருத்துவப் பரிசோதனை, கண் மற்றும் பல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. ஜல்லடியன்பேட்டை, நாராயணபுரம், பள்ளிக்கரணையை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள், முகாமில் கலந்து கொண்டனர்.
* வில்லிவாக்கம்: கனமழையால், வில்லிவாக்கம், சிட்கோ நகர், வடக்கு மற்றும் தெற்கு ஜெகநாதன் நகர் பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனால், வில்லிவாக்கம் தனியார் திருமண மண்டபத்தில், தனியார் மருத்துவமனை சார்பில், நேற்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.